சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவுவதால், இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் கட்டாய மதிய ஓய்வு இடைவேளை சட்டம் அமுலுக்கு வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இந்த சட்டத்தின்படி, நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணி வரை நேரடியாக திறந்த வெளியில் அல்லது சூரிய ஒளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாயமாக இடைவேளை கொடுக்க வேண்டும். அவர்கள் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. எங்கேனும் இந்த சட்டம் மீறப்பட்டால், 19911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.
No comments:
Post a Comment