நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 10 June 2024

நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் !

IMG-20240610-WA0062


நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிதென்னை பகுதியில் இன்று (10) திங்கள் கிழமை  இடம்பெற்றது.

IMG-20240610-WA0063

ரிதிதென்னை குளத்துக்கு அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் குளக்கட்டில் சறுக்கி வீழ்ந்து நீரில் மூழ்கி மரணமடைந்து உள்ளதாக பொலிஸாரின் ஆரம்க்பகட்ட விசாரணையில்  தெரிய வந்துள்ளது.


மரணமடைந்த இளைஞனின் உடலை பிரதேச மீனவர்கள் கண்டெடுத்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

IMG-20240610-WA0063


இவ்வாறு மரணமடைந்த இளைஞன் ரிதிதென்னை புதிய கிராமம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சாலி முகம்மது றிஹாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad