மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் 2024 ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் 100 மில்லியன் ரூபா நிதி மாவட்டத்தின் பல்வேறு பகுகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடசாலைகள், வழிபாட்டுத்தளங்கள்,சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்கள், என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணகள் கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன் (15) மாலை ஏறாவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஏ. சியானா, ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எம். முபாஸ்தீன் உட்பட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின்போது 68 திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணக்கடிதங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கரங்களினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment