ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கொள்கை பரப்பு விளக்க கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ALM.லியாப்தீன் JP தலைமையில் வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலைய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (11) மஹ்ரிப் தொழுகை பின் இடம்பெற்றது.
இதில் கல்குடா தொகுதியில் கட்சியை எவ்வாறு வழிநடாத்தி செல்வது எதிர்கால அரசியல் நகர்வுகள் சம்பந்தமான விளக்கங்கள் கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து மாவட்ட கொள்கை பரப்புச்செயலாளர் லியாப்தீன்JP உரையாற்றுகையில், கட்சி விசுவாசம் என்பது மிக முக்கியமான விடயமாகும். நாம் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக ஒற்றுமையாகவும்செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் கிராம மட்ட கட்டமைப்புகள் உயிரோட்டம் உள்ளதாக மாற்றும்போது இவ்வாறான செயற்பாடுகளை கிராம மட்டத்தில் இயங்கும் கட்சி கட்டமைப்பும், கட்சி போராளிகளும் இணங்காண்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக ஏற்படுகிறது.
எனவே கட்சியின் கிராம மட்ட செயற்பாடுகளில் கட்சி முக்கியஸ்தர்கள் உயிரோட்டமாக செயற்பட வேண்டும். கட்சி கட்டமைப்புகள் உயிரோட்டம் உள்ளதாக அமைக்கப்பட்டபின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கட்சியின் மத்திய குழுக்கள் புனரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாம் எல்லோரும் கட்சியின் செயற்பாடுகளில் "மசூரா" அடிப்படையில் கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்க வேண்டும். அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது கட்சியின் செயற்பாடுகள் சிறந்ததாக அமையும்.
கலந்துரையாடப்படாமல் எடுக்கப்படும் தீர்மானங்களும், செயற்பாடுகளும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என்ற யதார்த்தத்தில் நாம் எல்லோரும் தெரிந்து கொண்டு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அமைப்பாளர் MIM தையூப் ஆசிரியர்கள் அவர்கள் ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சி மிக நீண்ட கால வரலாறு கொண்ட பழமை கட்சியாகும். இதனை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் இனங்களுக்கு இடையே ஒற்றுமை, பரஸ்பரம்,சமத்துவம் பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதனூடாக நாட்டில் பல பகுதிகளில் பல பிரதிநிதித்துவங்கள் ஊடாக பலஅரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
பல சதிகளின் ஊடாக முன்னாள் சுற்றாடல் துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அகமட் அவர்களை அவர்களின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மேற்கொண்ட சதிகளை எல்லாம் முறியடித்து மீண்டும் அதிகாரத்தில் நஸீர் அஹமட் அவர்கள் வந்திருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் வரமாகும் என்று குறிப்பிட்டார்.
இதன் போது கல்குடா தொகுதி அமைப்பாளர் M.ஜவாத் கருத்து தெரிவிக்கையில் எமது தலைமையான வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அகமட் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீண்டும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் கதைத்து அதற்கான நிதி ஒதுக்கீடுகளை பெற்று மீண்டும் ஆரம்பித்துள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எமது நாடு பொருளாதார நெருக்கடி, கொரோனா காலப்பகுதிகளில் நாட்டை வழி நடாத்தி செல்ல முடியாது புறமுதுகு காட்டி ஓடிய அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் நலன்களிலும் பொருளாதாரத்திலும் முனைப்பு காட்டிய கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் பணி அளப்பரியது என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வில் ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியின் கல்குடா செயலாளர் SIM. நிப்ராஸ், ஊடக பிரிவுகளான AG அஸ்லம், MHM. இம்ரான், கட்சியின் வட்டார அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அண்மை காலம் தொடக்கம் எமது ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சி செயற்பாடுகள் நாட்டின் பல பகுதிகளிலும் தனது கட்சி ஆதரவாளர்களின் அர்ப்பணிப்புகளுடன் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று மிளிர தொடங்கியுள்ளது.
செயலாளர். ஜனநாயக ஐக்கிய முன்னணி (கல்குடா)
No comments:
Post a Comment