அஷ்ஹரியன்ஸ் இளைஞர் நண்பர்கள் அமைப்பின் 4 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு மேலங்கி அறிமுக நிகழ்வு நேற்று (13) தனியார் கல்வி நிறுவனமொன்றில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் அதீதிகளாக ஐ.கே.கோல்ட் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சியான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நளீம் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்யாலய ஆசிரியரும் சட்டக் கல்லூரி மாணவனுமான ஹாதிக் இப்ராஹிம், அஷ்ஹரியன்ஸ் சமூக சேவை அமைப்பின் ஆலோசகர்களும் ஆசிரியர்களுமான சியாட், அஷ்ரப் (பலாஹி) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
மேலும் இந்நிகழ்வில் கடந்த 4 வருடங்களில் கடந்து வந்த பாதை என்ற அடிப்படை முன்மொழிவொன்றின்றினை அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.ஹரீஸ் நிகழ்த்தியிருந்தார்.
தொடர்ந்தும் வருகை தந்திருந்த அதீதிகளினுடைய உரையில் அமைப்புக்கு பல ஆலாசனைகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அகமட் கபீர் ஹஷான் அஹமட்)
No comments:
Post a Comment