வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பொலிஸாரின் அராஜகம் மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 March 2024

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பொலிஸாரின் அராஜகம் மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !



வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினத்தன்று நடைபெற்ற பொலிஸாரின் கடும் அத்துமீறிய செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 



குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்று (10) மட்டக்களப்பு - காந்தி பூங்காவிற்கு முன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


பொலிஸாரின் அராஜகம் 


சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ததுடன் மேலும், கடும் அடக்குமுறையினை பிரயோகித்திருந்தனர்.




இந்நிலையில், சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று உத்தரவிட்டுள்ளது.



இதனை கண்டிக்கும் முகமாகவே மட்டக்களப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இதன்போது, “எங்கள் மண்ணில் எங்கள், மலையில் உங்களுக்கு உரிமையில்லை, சிவராத்திரி நாளிலும் சிங்கள அடக்குமுறை ” போன்ற பதாதைகள் ஏந்தியவாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) மு.பா. உறுப்பினர்கள் மு.மா.ச. உறுப்பினர்கள் மு.பி.ச.உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை முன்னால் உறுப்பினரும்  தமிழீழ விடுதலை இயக்க  இளைஞர் அணி தலைவருமான இ.வேணுராஜ் அவர்களும் தமிழ் தேசிய கட்சி உணர்வாளர்கள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad