மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள், மாவட்டங்களில் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான தேர்தல் முறைகள் மற்றும் சட்ட கட்டமைப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் (RDPO) ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் வி.ரமேஷானந்தன் தலைமையில் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் கடந்த (06) திகதி இடம் பெற்றது.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் (RDPO) ஏற்பாட்டில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Centre for monintoring Election violence) பங்கு பற்றுதலுடன் இச் செயலமர்வு இடம் பெற்றது.
இச்செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முகமட் , வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் ஏ.எம்.என். விக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.
இச்செயலமர்வில் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் கொள்வனவு உத்தியோகத்தர் பீ.மேகலநாதன், கள உத்தியோகத்தர் எஸ்.உபதாரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
டெலிக்ராம் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
இதன் போது தேர்தல் வன்முறை கண்கானிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட விரிவுரைகளின் போது
ஜனநாயக,தேர்தல் மற்றும் பங்கேற்புடனான ஆளுகை, தேர்தல் பிரச்சார நிதியாக்க ஒழுங்குபடுத்தல் மற்றும் இலங்கையின் தேர்தல் முறைமைகள் தொடர்பான பிரச்சினைகள், பிரச்சார நிதியாக்க ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடல் போன்ற தேர்தல் ஜனநாயகத்தில் குடிமக்களின் வகிபாகம், ஜனநாயகத்தை வலுப்படுத்தல் மற்றும் பிரச்சார நிதி கண்காணிப்புக்கான குடிமக்களை அறிவூட்டும் முயற்சிகள் மற்றும் உத்திகள் என்பன விரிவுரையாளர்களால் வழங்கப்பட்டது.
மேலும் அரசினால் கொண்டுவரப்பட்ட 2023 ஆம் ஆண்டு மூன்றாம் இலக்க தேர்தல் சட்டம் தொடர்பாக மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இவ் சட்டதிட்டங்களை எவ்வாறு கையாள்வது ஜனநாயகத்தை எவ்வாறு வலுவூட்டல் தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment