சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும் - 2024 ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 March 2024

சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும் - 2024 !

IMG-20240313-WA0047


மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும்  பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில்  பழுகாமம்  துரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் இன்று (13) திகதி இடம் பெற்றது.

IMG-20240313-WA0046


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக வன்னி ஹோப் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம் கலந்து கொண்டார்.


"அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளீர் தின நிகழ்வு இடம் பெற்றது.


இதன் போது பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு அதிதிகளினால் கெளரவம் வழங்கியதுடன் மகளீர் தின சிறப்பு பேச்சு, வினோத உடைப்போட்டி, நடனம், என பல நிகழ்வுகள் இடம் பெற்றது.

IMG-20240313-WA0049


இவ் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவிகளுக்கு  பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

IMG-20240313-WA0045


இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தில் சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களை வலுப்படுத்தி அவர்களது உற்பத்தியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக அந்திய செலவாணியை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

IMG-20240313-WA0051


இந் நிகழ்வில் போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் துலாஞ்சனன், போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் S.பகிதரன் ,உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.சசிகரன், வன்னி ஹோப்  வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.பாஸ்கரன் பிரதேச செயலக உயர் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

IMG-20240313-WA0043


மகளீர் தின விழாவிற்கான பிரதான  அணுசரனையை வன்னிஹோப் நிறுவனம் வழங்கியதுடன் இவ் நிறுவனம் பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் சிறார்களின் கல்வி வளர்ச்சிற்கு இலங்கை புராகவும்  சேவை வழங்கி வருகின்றனர்.

IMG-20240313-WA0052


இந் நிகழ்வில் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக் கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad