சமூக ஊடக ஆர்வலர்களுக்கான கப்சோவின் இரண்டாம் கட்ட பயிற்சிப் பட்டறை நிறைவு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 February 2024

சமூக ஊடக ஆர்வலர்களுக்கான கப்சோவின் இரண்டாம் கட்ட பயிற்சிப் பட்டறை நிறைவு !

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான "Youth Media Project" வேலைத்திட்டம் கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்று வருகின்றது. 


வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

இந் நிகழ்ச்சித்திட்டத்தின்  இரண்டாம் கட்ட நிகழ்வு கல்முனை லோட்டஸ் வைட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (11) நடை பெற்றது. நிகழ்வுக்கு வளவாளராக வருகை தந்திருந்த விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம் பைரூஸ் “ஊடக எழுத்தறிவு, போலிச் செய்திகளை எவ்வாறு இணங்காண்பது“ தொடர்பாக விரிவுரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இவ் வேலைத்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வலர்களைக் கொண்டு நடாத்தப்பட உள்ள ஒரு வருட கால திட்டமாகும்.  



GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில்  செயற்படுத்தப்படும் Youth Media Project வேலைத்திட்டத்தின் கீழ் “HOPE of YOUTH ”எனும் தொனிப்பொருளில்  நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


                  (அஹமட் கபீர் ஹஷான் அஹமட்)




No comments:

Post a Comment

Post Top Ad