மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் புலம்பெயர் உறவுகளின் நிதி உதவிகள் மூலம் (RJ தமிழா) யூடியூப்பினரால் 1தொடக்கம் 6ஆண்டு வரை உள்ள 58 மாணவர்களுக்கு மட்/பட் 35ஆம் கிராமம் மண்டூர் கண்ணன் வித்தியாலய அதிபர் முன்னிலையில் இன்று (19) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று கோட்டக்கல்வி வலயத்துக்குட்பட்ட 35ஆம் கிராமம் மண்டூர் கண்ணன் வித்தியாலயம் பாடசாலை பல தடவைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கட்டிடங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டும் பாடசாலை மாணவர்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் கல்வியை மேற்கொள்கின்ற போது இன்று (19-02-2024)மாணாவர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பாடசாலைகளுக்கு புலம் பெயர் உறவுகளால் உதவிகள் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்
நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆலய நிருவாகத்தினர் இளைஞர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
புலம்பெயர் உறவுகளால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பெற்றுத்தந்தமைக்காக (RJ-Tamizha ) தமிழா யூடியூப்பினருக்கு கிராமத்து மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment