தற்போது நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை நீடிக்கும் சந்தர்ப்பத்தில் அதிக நீரிணை திறந்துவிட வாய்ப்புள்ளதனால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் ஆற்றினை அண்மித்த பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
எனவே வெள்ள அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு பொது மக்கள் பின்வரும் அறிவுறத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
- தாங்கள் குடியிருக்கும் பிரதேசத்தில் அதிகம் வெள்ளம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தங்களது உறவினர்களின் வீடுகள் பாதுகாப்பாக இருக்குமானால் அவ்வீடுகளுக்கு இடம்பெயர்ந்து கொள்ளவும்.
- அல்லது பாதுகாப்பு மத்திய நிலையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கீழ் குறிப்பிடப்படும் இடங்களுக்கு இடம் பெயர்ந்து தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
- அவசர நிலையின் போது தங்களது பிரிவு கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அட்டாளைச்சேனை :-
- கமு/அக்/அல் - முனீர் பெண்கள் உயர் பாடசாலை .
- கமு/அக்/அல் - அரஹம் வித்தியாலயம்.
- கமு/அக்/ அந்நூர் மகா வித்தியாலயம்
- கமு/அக்/அல் - ஸஹ்ரா வித்தியாலயம்.
பாலமுனை :-
- கமு/அக்/அல் - ஹிக்மா வித்தியாலயம்.
- கமு/அக்/ இப்னுஸீனா ஜூனியர் வித்தியாலயம்.
ஒலுவில் :-
பிரதேச செயலகம்,
அட்டாளைச்சேனை.
No comments:
Post a Comment