நமது நாட்டின் அரசியல் வரலாற்றை பின்நோக்கிப் பார்த்தால் இனவாதத்தினை வளர்த்வர்கள் எல்லோரும் இனவாதத்தால் அழிந்து போன வரலாற்றை நாம் கண்டுள்ளோம்.
ஒவ்வொரு இனமும் தங்கள் இனம் மீது விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால் இன்னும் ஒரு இனத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் அழிக்க முயற்சிக்க கூடாதென சாந்தமருது -18ம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி பொருளாளர் ஏ.சி.எஹியாகான் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புணரமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளருமான கௌரவ பைசால் காசிம், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதர், அம்பாரை மாவட்ட குழுவின் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்டீன், சாய்ந்த மருது அமைப்பாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கான ஜனாதிபதிக் காலம் இரண்டு வருடம் இருக்கத்தக்கதாக அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி இன்னும் ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கு கணவு கண்டு யாருடைய கருத்துக்களையும் கேட்காமல் ஜனாதிபதி தேர்தலை நடாத்தினார். அத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் மஹிந்த ராஜபக்ஷ தனக்கான இரண்டு வருட கால ஜனாதிபதியாக இருக்க வேண்டிய காலத்தையும் இழந்தார்.
அடுத்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இனவாத்தினை மூலதனமாகப் பயன்படுத்தி 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படடார். இவர் ஜனாதிபதியாக வகிந்த காலப்பகுயில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
கொரோனா நோயினால் மரணித்த ஜனாஷாக்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார இஸ்தாபனம் அறிவித்தும் இலங்கையில் மாத்திரம் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் திட்டமிடப்பட்ட முறையில் எறிக்கப்பட்டன. உலகமே இச்செயற்பாடு தவறானது என கூட்டிக்காட்டிய போதும் இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஷாக்கள் எம் கண்முன்னே எறிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களின் துஆ பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸ இன்னும் இரண்டரை ஆண்டு காலம் பதவி வகிக்க வேண்டியவர் அதிகாரத்தில் இருந்தவாறே நிலத்திலே வாழமுடியாத நிலைமை ஏற்பட்டு நீரிலும், வானிலும் சில தினங்கள் வாழ்ந்து விட்டு நமது நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. நமது நாட்டின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி பதவியில் இருந்த ஒருவர் பதவியில் இருந்தவாரே நாட்டை விட்டு தப்பியோடிய நிகழ்வு இதுதான் முதல் நிகழ்வாகும். இந்நிகழ்வுகள் நம்எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது,
இதேவேளை தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களில் ஒன்று அவர்களின் ஆயுதங்களை முஸ்லிம் சமூகத்தின் பக்கம் திசை திருப்பியதாகும் என்பதைனை இன்று தமிழ் தலைவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தைப் பொறுத்தவரை நீண்டகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் பலமான பிரதேசமாக இருந்து வந்திருக்கின்றது. சாய்ந்தமருது மக்களின் பிரதேச சபை விடயமாக தீர்வு வேண்டி சாய்ந்தமருது மக்கள் போராட்டங்களை நடாத்தினார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும். சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுக் கொள்ளும் விடையத்தில் இதுவரை சாய்ந்தமருது மக்களுக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது. இறைவன் நாடினால் நல்ல சூழ்நிலைகள் ஏற்படும் வேளையில் இப்பிரதேச மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடையத்தில் முஸ்லிம் காங்கிரசும் முக்கிய பங்கினை வழங்கும் என்ற நம்பிக்கை எங்கள் மத்தியில் உள்ளது,
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த காலங்களில் கட்சியும் கட்சி ஆதரவாளர்களும் பாரிய சவால்களை எதிர் நோக்கவேண்டி நிலை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பங்களில் கட்சியின் கொள்கைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கட்சி முக்கியஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
டெலிக்ராம் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
சாந்தமருது பிரதேசத்தின் கட்சி புணரமைப்பு பணிகளில் கட்சி முக்கியஸ்தர்கள் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் ஒன்றினைந்து கட்சியின் நலனை முன்னிட்டு கிராம சேவகர் பிரிவுகள் தோரும் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்மென கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment