முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மானுக்கு எதிராக சுயதொழில் வர்த்தக சங்கம் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் பாராளுமன்ற கடிதத்தாளை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் கொழும்பு மாநகர சபை தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது சுய விருப்பத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததன் பின்னர், 2023, 12 ஆம் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பினார்.
அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மனிதன் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கடித தலைப்பை பயன்படுத்தினால் அவருக்கு என்ன நடக்கும். சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒரு சட்டமும் இருக்கிறதா? நாம் இந்த போலி ஆவணத்தை இன்று சி.ஐ.டியிடம் கையளித்தோம், என தெரிவிக்க பட்டுள்ளது.
No comments:
Post a Comment