அபுதாபியில் பணிபுரிந்த நிலையில் 10 நாட்களாக எவ்வித தகவலுமின்றி இருந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டிலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தேகம கோணாபினுவெல எலபலவத்த பகுதியைச்சேர்ந்த கவிந்து சத்சர என்ற இளைஞன் அபுதாபியில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அங்கு சென்ற இவ் இளைஞன் தொடர்ந்து தொலைபேசி ஊடாக தன்னுடைய வீட்டாரோடு தொடர்பினை வைத்திருந்தார்.
வட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
எனினும் கடந்த 6 ஆம் திகதிக்கு பின்னர் அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். எனினும் 10 நாட்களின் பின்னர் இன்றைய தினம் அவர் பணிபுரிந்த நிறுவனம் குடும்ப உறுப்பினர்களுக்கு கவிந்து சத்சர உயிரிழந்துவிட்டதாக அறிவித்தது.
No comments:
Post a Comment