பரீட்சைத் திணைக்களத்தின் அறிவித்தல் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 20 December 2023

பரீட்சைத் திணைக்களத்தின் அறிவித்தல் !



நாடளாவிய ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad