ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 December 2023

ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்றது. 

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்துங்கள்.

இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.  


இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், எஸ்.ராசமாணிக்கம், ஜீ.கருணாகரன்,டீ கலையரசன், குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.இம்.சீ.எம்.ஹேரத், சுற்றாலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் உள்ளிட்டவர்களும் நல்லிணக்கம் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad