ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் இருந்து 2018 ம் ஆண்டு தொடக்கம் 2023 ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவான 237 மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை அலிகார் தேசிய பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் MM.மௌஜூத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவருமான செய்யித் அலிஷாஹிர் மௌலானா கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் SMM.அமீர் மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்களான MJF.றிப்கா மற்றும் MHM.றமீஸ் கலந்து கொண்டதுடன் ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளர் MHM.ஹமீம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாண பொறியிலாளர் AMM.ஹக்கீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன் மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவ மாணவிகளுக்கு இந்நிகழ்வில் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஷாஹீர் உரையாற்றுகையில்
1996 ம் ஆண்டு தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட இவ் அலிகார் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற பலர் பல துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர்.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
அண்மையில் கூட 20 வயதிற்குட்பட்ட பாடசாலைக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் அலிகார் தேசிய பாடசாலை அணி தேசியரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான மேற்கொண்ட முயற்சி வெற்றியும் அளித்துள்ளது.
விரைவில் பாடசாலை மைதானம் புனரமைப்பு செய்யப்படும் என தெரிவித்ததோடு இலங்கை திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பட்ஜெட் முன்மொழிவின் போது நாடாளவிய ரீதியில் 100 கல்வி வலயங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 5000 மாணவர்களுக்கு தலா 6000 ரூபாய் புலமைப்பரிலும் வழங்குவதற்கான முன்மொழிவும் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட அரச அதிகாரிகள், கல்விமான்கள், உலமாக்கள் உட்பட பலர் கொண்டமை குறிப்பிடத்தக்கது .
( உமர் அறபாத் )
No comments:
Post a Comment