கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த அதிக நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இருந்த போதிலும், மேலதிக சிகிச்சைகள் மற்றும் தங்கி சிகிச்சை பெறக்கூடிய எவ்வித வசதிகளும் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் தூரப்பிரதேசங்களில் காணப்படுகின்ற ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு செல்கின்ற துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இவற்றை நிவர்த்தி செய்யுமுகமாக முதற்கட்டமாக ISRC SRI LANKA தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினூடாக புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 05.10.2023ம் திகதி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி ஏ.நளீம்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், நிதி வழங்குனரான ISRC SRI LANKA இன் இணைப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நளிமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட ஆயுர்வேத இணைப்பாளர் திருமதி ஜே.பாஷ்கரன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.முஸம்மில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், வைத்திய அதிகாரி எம்.றிக்காஷ், எம்.நிம்சாத் ஆகியோரும் பொதுமக்ககளும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment