கொழும்பு நகரிற்கு விடுக்கப்பட்ட குண்டு வெடிப்பு எச்சரிக்கை : வெளியான பரபரப்புத் தகவல் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 5 October 2023

கொழும்பு நகரிற்கு விடுக்கப்பட்ட குண்டு வெடிப்பு எச்சரிக்கை : வெளியான பரபரப்புத் தகவல் !


கொழும்பின் பல இடங்களை இலக்கு வைத்து எதிர்வரும் சில நாட்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (04) பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரால் பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே வீசப்பட்ட மரத்துண்டு ஒன்றின் மூலம் இந்தத் தாக்குதல் தொடர்பிலான அடிப்படைத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad