2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் கிராமிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உத்தேசிக்கப்பட்ட ஆடு வளர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் எண்ணக்கருவிற்கு அமைய விவசாய அமைச்சின் கீழ் இயங்குகின்ற கிராமிய பொருளாதாரப் பிரிவினால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகின்ற நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 7 பயனாளிகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கும் நிகழ்வு இன்று (23) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீட், அட்டாளைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி எச். டகானா, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஏ. எம். எஸ். ஹரிஸ் மெளலானா, பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ. எஸ். சபானா, எம். ஏ. சிபானா பானு, கமத்தொழில் அமைச்சின் கால்நடை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. எம். எம். நஸபி மற்றும் பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(சபானா அபூபக்கர்)
No comments:
Post a Comment