பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 October 2023

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை !

சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23.10.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தென் மாகாண கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். 

சீரற்ற வானிலை அதன்படி தெனியாய,அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை


இந்த வெள்ள அபாய எச்சரிக்கை, நில்வள கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் நீர்ப்பாசன திணைக்களத்தினால்,வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad