இளைஞர் கழக எல்லே விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய பாலமுனை இளைஞர் கழக அணி எல்லே போட்டியில் நாவிதன்வெளி பிரதேச செயலக அணியினரை 01:02 என்ற புள்ளியடிப்படையில் வெற்றி பெற்று மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டியவில் நாளை (21) இடம் பெறவிருக்கும் தேசிய மட்டப் போட்டி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை இளைஞர் கழக அணியினரை வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்வு இன்று (20) அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ. எம். றியாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
(சபானா அபூபக்கர்)
No comments:
Post a Comment