பிராந்தியத்தின் சுற்றாடல், சூழல் மாசடைதல் பிரச்னைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிளின் ஐந்தாவது கலந்துரையாடல் எதிர்வரும் ஒக்ரோபர் 03 - 06 திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதென சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
அதன் பிரதான அமர்வு ஒக்டோபர் 05 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதோடு,
ஐ.நா. சுற்றாடல் நிகழ்ச்சி நிரல் மற்றும் சுற்றாடல் அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்யவுள்ள குறித்த நிகழ்வில் பிராந்தியத்தின் நீண்ட கால சுற்றாடல் பிரச்னைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாடுகள், அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இம்முறை கலந்துரையாடலில் ஆசிய பசுபிக் வலயத்தின் 41 நாடுகளின் அமைச்சர்கள், 300க்கும் அதிகமான வெளி நாட்டு பிரதிநிதிகள் மற்றும் 100இற்கும் அதிகமான தொழில் வான்மையாளர்கள் பங்குபற்றுவர் என எதிர்பார்ப்பதாகவும், 2024 பெப்ரவரி 24 தொடக்கம் மார்ச் 01 ஆம் திகதி வரை நைரோபில் நடைபெறவிருக்கும் ஆறாவது ஐ.நா சுற்றாடல் சபையின் அமர்வுக்கு இணையாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)
No comments:
Post a Comment