பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்த 9ஆம் தர மாணவன்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 27 September 2023

பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்த 9ஆம் தர மாணவன்!


இரத்தினபுரி – கலவானை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவத்தின் போது குறித்த மாணவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த மாணவன் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் பாடசாலையின் 9 ஆம் தரத்தில் கல்வி கற்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

விற்பனைக்கு கொண்டுவரப்படும் கசிப்புகளை குடிநீர் போத்தலில் எடுத்து வந்துள்ளதாகவும், அப்பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad