அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று 2023.07.11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் ஏற்பாட்டிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ. எல். எம். அதாவுல்லா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீட், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம். ஐ. பாயிஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட தலைவருமான கெளரவ ஏ. எல். எம். அதாவுல்லா ஆகியோரினால் அஸ்வெசும திட்டம் தொடர்பான விளக்கம் மற்றும் கடந்த 2022/23 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் இறுதி அறிக்கை பற்றியும் உரையாற்றினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment