​அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று சர்வதேச சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 June 2023

​அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று சர்வதேச சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பு!



சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம் எனும் தலைப்பின் கீழ் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் பிரகாரம் சர்வதேச சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டதன் பிரகாரம் மே மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 05 ஆம் திகதி இன்று வரை சுற்றாடல் வாரத்தினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


அந்தவகையில் இன்று 2023.06.05 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் "பிளாஸ்ரிக் மூலம் ஏற்படக்கூடிய மாசைத் தடுப்போம்"

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

 என்ற தொனிப்பொருளில் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வுகள் மிக சிறப்பான முறையில் சுற்றாடல் அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலின் மூலம் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், நிர்வாக உத்தியோகத்தர் கே. பி. சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீட், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ. ஆர். ஜவ்பர், நிர்வாக பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம். ஏ. சி. றிஹானா, அம்பாரை மாவட்டத்தின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர்களான எம். ஐ. எம். இசாஹ், கே. ஐ. அலி ஹசன்,  பிரதேச செயலக சுற்றாடல் மற்றும் விவசாய அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் யுவதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                                    

                                       ( சபானா அபூபக்கர் ) 

No comments:

Post a Comment

Post Top Ad