கடந்த 28.05.2023 அன்று கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் கல்குடா தொகுதி இணைப்பாளருமாகிய எம்.ஜவாத் அவர்களின் பிரதான பங்குபற்றுதலுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் எம்.சஹாப்தீன் அவர்களின் தலைமையில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள தொழில் வழங்குனர் தமக்கான சம்மேளனம் ஒன்றையும் அதற்கான நிர்வாக கட்டமைப்பினையும் இதன்போது ஏற்படுத்திக்கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி,கோறளைப்பற்று மேற்கு தொழில் வழங்குனர் சம்மேளத்தினர் இதன் போது இப்பிரதேசத்தில் தொழில் முயற்சியில் ஈடுபடும் தொழில் வழங்குனர்களின் தொழில்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் இணைப்பாளர் கருத்து தெரிவிக்கும் போது தொழில் வழங்குனர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு அமைச்சருடன் விரைவில் சந்திப்பை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்வதாகும் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தில் தொழில் வழங்குனர்கள் தொழிலாளர்களை கொண்டு பல்வேறு பங்களிப்பை ஆற்றிவருகின்றார்கள் அந்த வகையில் இவர்களுக்கான தீர்வை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அகமட் அவர்களுடன் இணைந்து ஜனாதிபதி ஊடாக எமது பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் கோரிக்கை விடுத்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
ஆனால் துரதிஸ்டவசமாக தொழில் முனைவோருக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பு ஏதும் இல்லாதும், தொடர்புபட்ட அமைச்சுக்களின் வழிகாட்டல்கள், ஆலோசனைகள், ஊக்குவிப்புக்கள், வரப்பிரசாதங்கள் எதுவும் இவர்களுக்கு கிடைக்கப்பெறாத நிலமையே இன்று வரை காணப்படுகின்றது.
விவசாயம், மீன் பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக மிகப் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகவுள்ள இத்தொழில் துறைகளுக்கு எதிராக சுற்றுச் சூழல், பொதுமக்களின் சுகாதார நலன் என்பவைகள் தொடர்பாக அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதால் இத் தொழில் துறையினார் நிச்சயமற்ற சூழ்நிலையில் உள்ளனர்.
இதனால் தொழில் நிலையங்களை மேம்பாடு செய்வதற்கும், நவீன முறையில் புனருத்தானம் செய்வதற்கும், புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கும் பெருந்தொகையான நிதியினை இந்நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்வதில் தொழில் துறை உரிமையாளர்களும், தொழில் முனைவோரும் தயக்கம் காட்டுகின்றனர்.
கடந்த காலத்தில் சனக் குடியிருப்புக்கள் இல்லாத செம்மனோடை, மாவடிச்சேனை, காகிதநகர், தியாவட்டவான் போன்ற பிரதேசங்களில் அரசி ஆலைகள், மர ஆலைகள் மற்றும் ஏனைய தொழில் துறைகளை பாரிய முதலீட்டுடன் இடமாற்றம் செய்த போதிலும் காலப்போக்கில் இப்பிரதேசங்களில் குடியிருப்புகள் ஏற்பட்டு தொழில் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. வேறு பொருத்தமான இடங்களுக்கு தொழில் நிலையங்களை மாற்றம் செய்வதற்கு தேவையான பாதுகாப்பான காணிகள் இல்லாதிருப்பதும்; இங்கு குறிப்பிடத்தக்க விடயம். அதே நேரம் புனானை தொடக்கம் காகித ஆலை வரையான அரச காணிகள் பல்வேறு தொழில் துறைகளுக்கு வழங்கப்பட்டு இப்பிரதேசத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகவுள்ள இத்தொழில் துறையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் கவலைக்குரிய விடயமாகும்.
ஆகவே இதனை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முனைப்புடன் 07.06.2023 கௌரவ சுற்றாடல் அமைச்சர் நஸீர் அகமட் அவர்களை சுற்றாடல் அமைச்சில் கல்குடா இணைப்பாளர் ஜவாத் அவர்களின் தலைமையில் தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் சந்தித்து கலந்துரையாடினார்கள் தமது கோரிக்கைகளை அமைச்சர் அவர்களிடம் முன் வைத்தார்கள் விரைவாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்கள் வாக்குறுதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் நாட்டின் வளங்களை முறையாக பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செயற்பாடு வரவேற்கத்தக்கதாகவும் அதற்காக நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு வேலை திட்டங்களை நடைமுறைப்படுத்தி அரசாங்கம் செயல்பட தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் )
No comments:
Post a Comment