நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் - 27 வயது குடும்பப் பெண் உயிரிழப்பு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 8 June 2023

நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் - 27 வயது குடும்பப் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் இன்று (08-06-2023) 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.


குறித்த பெண் அவரது 4, 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


நஞ்சுத்தன்மையான பேத்தை எனும் அழைக்கப்படும் "புப்பர் பிஷ் "கடல் மீனை உட்கொண்டதன் காரணமாகவே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad