மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 June 2023

மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் !


வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரிய்யா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் ஆண்கள், பெண்கள்  என இருபாலருக்கும்  தனித்தனியாக பள்ளிவாயல் வளாகத்தில் இரத்ததான முகாம் இன்று  04.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 தொடக்கம் மதியம் 12.30 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியதை அவதானிக்க முடிந்தது.


“ நாட்டில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உதிரங்களை வழங்கி பெறுமதியான உயிர்களை காப்போம்." என்ற தொணிப்பொருளில் இப்பள்ளிவாயில் நிர்வாகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இப்பள்ளிவாயல் நிர்வாகம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட விடயங்களை நிருவாகத்தினர் மேற்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக இப்பிரதேசத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக மாநாடு ஒன்றை நடத்தி அதற்கான செயற்பாடை மேற்கொண்டு வந்தமை மற்றும் பள்ளிவாயலில் உணவு வங்கியை ஆரம்பித்து ஏழைகளுக்கு உணவு வழங்கும் செயல்திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை, பெருநாள் தினத்தில் வீட்டுக்கு ஒரு சகன் செயத்திட்டத்தை அமுல்படுத்தி சிறப்பாக செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.


இப்பள்ளி நிர்வாகத்தினர் ஜாமியத்துல் ஹிழ்ரிய்யா என்ற அறபுக் கல்லூரியின் கீழ் பதியப்பட்ட மதரஸா ஒன்றையும் நடத்தி வருகின்றது. மேலும் இந்த மதரசாவை திறம்பட நடத்துவதற்கு தனவந்தர்களின் உதவியினை ஒத்தாசையும் இப்பள்ளிவாயல் நிர்வாகத்தினர் எதிர்பார்த்து நிற்கின்றனர்.


                                           ( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் ) 

No comments:

Post a Comment

Post Top Ad