நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 1 June 2023

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை !


போதுமான எரிபொருட்கள் கையிருப்பு இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.


எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


குறைந்தபட்சம் 50% இருப்பு வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறும் CPCயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment

Post Top Ad