மட்டக்களப்பில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு கோரி போரதீவுப்பற்று கலாச்சார மண்டபத்துக்கு முன்பாக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 16 June 2023

மட்டக்களப்பில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு கோரி போரதீவுப்பற்று கலாச்சார மண்டபத்துக்கு முன்பாக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நேற்றையதினம் (15.06.2023) போரதீவுப்பற்று பிரதேச கலாசார மண்டபத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் குறித்த மண்டபத்திற்கு முன்பாக மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


தமது பூர்வீக எல்லைகளை மாற்றியமைக்கவேண்டாம் எனவும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தினை இடமாற்ற வலியுறுத்தியும் அரச காணிகளை அபகரிப்பதை தடுத்துநிறுத்துமாறு கோரியும் சட்ட விரோத மண் மாபியாக்களுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என வலியுறுத்தியும் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad