மனித மேம்பாட்டு அமைப்பு-ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் Young Leadership Conference - 2023
"பொருளாதார நெருக்கடியில் இருந்து இளைஞர் சமுதாயத்தினை மேலோங்க செய்தல்" எனும் தொனிப்பொருளினை அடிப்படையாக கொண்டு (06.05.2023) அன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்காவின் ஸ்தாபக தலைவர் எஸ். ஏ முஹம்மது அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
பிரதம அதிதியாக இந்தியாவில் இருந்து வருகை தந்த டீம் சென்னை ரொக் ஸ்டார் இனுடைய இணை நிறுவனர் லீடர். பாலகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்து கொண்டதோடு, விஷேட அதிதியாக டீம் ஷெய்யிட் நிறுவனத்தின் தலைவர் எஸ். ஷெய்யிட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், அவர்களோடு இனைந்து கௌரவ அதிதிகளாக; அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரும், மனித மேம்பட்டு அமைப்பின் தேசிய அமைப்பாளருமான ஐ. எல். எம். இர்பான், அவர்களும் டீம் பொனிக்ஸ் யினுடைய தலைவர் லீடர். எஸ். எம். சரன்ராஜ் அவர்களும், இலங்கை சவாட் கிக் பொக்சின் கூட்டமைப்பின் தலைவர் எஸ். பாரிஸ் மௌலானா, அல் ஹாஜ் யு. எல். எம். அஸ்ஹர் ஜமாலி, எஸ். சராபா மற்றும் ஏ. குமார் போன்ற பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முக்கிய வளவாலர்களாக டீம் ஷெய்யிட் யினுடைய முகாமையாளர் ஸாகிரா இஸ்மயில் அவர்களால் தலைமைத்துவம் பற்றிய சொற்பொழிவும் மற்றும் டீம் ஷெய்யிட். யினுடைய ஒருங்கிணைப்பாளர் கே. எப். பசீஹா பர்வீன் அவர்களினால் நேர முகாமைத்துவம் என்ற தலைப்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, டீம் ஷெய்யிட் நிறுவனத்தின் தலைவர் எஸ். ஷெய்யிட் அவர்களினால் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய முக்கிய குறிப்புக்களுடனான சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.
இதன் போது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 160 இளைஞர் யுவதிகள் கலந்து சிறப்பித்தனர்...!
எமது வட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ள
No comments:
Post a Comment