தனக்கும் அந்த கடத்தல் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது; அலி சப்ரி ரஹீம் !
செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார்.
தனக்கும் அந்த கடத்தல் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
“தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மீது மோசமான அபிப்பிராயம் கிடையாது. எனினும், நேற்று இடம்பெற்ற சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது”.
என்னுடன் வந்த நண்பர் ஒருவரே பெருந்தொகையான தங்கம் மற்றும் கையடக்கதொலைபேசிகளை கொண்டுவந்திருந்தார்.
அவர் தான் இந்த வேலையை செய்திருந்தார். அவர் கைகளில் இருந்தே தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.
ஆனால் என்னை குற்றவாளியாக ஆக்கியுள்ளனர். இந்நிலையில், அந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளதுடன், 75 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமருக்கும் அறிவித்திருந்தேன்.
ஆனால் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, உதவியும் செய்யவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் என்னை காப்பாற்றி இருக்கலாம். அவர்கள் அப்படியொன்றும் செய்யவில்லை.
நான் செய்யாத குற்றத்திற்காக குற்றவாளியாகியுள்ளதுடன், அபராதமும் செலுத்தியுள்ளேன். இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்.
இந்நிலையிலேயே அரசாங்கம் கொண்டுவந்திருந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment