தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்திருந்த நிலையில் முதல் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், டிண்டர் என்ற சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள அவரது வீட்டிற்குத் சென்ற கிரிக்கெட் வீரர் தனுஷ்க, தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.
அதற்கமைய, கடந்த 2022 ஒக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலை சிட்னியின் ஹையாட் ரீஜென்சி விடுதியில் தனுஷ்க கைது செய்யப்பட்டார்.
குறித்த வழக்கில் , கடந்த 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு தனுஷ்கவுக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால், நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
சிட்னி நீதிமன்றில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியான தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.
இலங்கை பிரஜையான தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் வழக்கு விசாணையில் ஈடுபட்டு சுமார் 6 மாதங்கள் கடந்த விட்டதாகவும் இந்த தாமதங்களினால் அவர் பெரும் தொகையை செலவிட நேரிட்டு வருவதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, அடுத்த நீதிமன்ற அமர்வில், உரிய நீதிமன்ற கட்டணத்தை நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றனர்.
No comments:
Post a Comment