தொடர் திருட்டுகளில் ஈடுபட்டுள்ள இளம்பெண் : பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார் !
பெண்களின் கடன் அட்டைகள், வங்கி அட்டைகள் மற்றும் பணப்பைகளை திருடும் யுவதியை கண்டுபிடிக்ககம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த யுவதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களில் பல இலட்சம் ரூபாயை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக தேடிவருவதாககூறப்படுகிறது.
பணப்பைகள் உட்பட பல்வேறு பொருட்களை திருடுவது போன்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்கள்வெளியாகியுள்ளதுடன், அதன் அடிப்படையில், இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பளை நகரில் உள்ள அழகு நிலையம் ஒன்றிற்கு வந்த அவர், பையிலிருந்த கடன் அட்டையை திருடி அதில்எண்பத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை வாங்கியுள்ளார்.
மேலும், நகைக்கடை ஒன்றில் தங்க நகையை வாங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்த காட்சிகள்கமராக்களில் பதிவாகியுள்ளது.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளைஆரம்பித்துள்ளனர்.
இந்த யுவதி தொடர்பில் கம்பளை, நாவலப்பிட்டி, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பல்வேறு பொலிஸ்நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment