சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் பிரகாரம் சர்வதேச சுற்றாடல் தின விழாவிற்கு சமாந்தரமாக தேசிய சுற்றாடல் வாரம் மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜுன் 05 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இதன் ஆரம்ப நிகழ்வாக மரநடுகை நிகழ்வு இன்று 2023.05.30 செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர், நிர்வாக உத்தியோகத்தர் கே. பி. சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். எல். ஏ. மஜீட், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ. எல். ஜவ்பர், நிர்வாக பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், சுற்றாடல் அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment