கம்பளை பகுதியில் குடிநீரில் கலந்த மலகழிவு? நீரை பருகிய மாணவி பலி! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 24 May 2023

கம்பளை பகுதியில் குடிநீரில் கலந்த மலகழிவு? நீரை பருகிய மாணவி பலி!

கம்பளை பகுதியில் குடிநீரில் கலந்த மலகழிவு! நீரை பருகிய மாணவி பலி!



கம்பளை - டோலுவ பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீரில் மலக்கழிவு கலந்துள்ளதாகவும் இதனால் 14 வயதுடைய பாடசாலை மாணவி வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும், 31 நீர் ஆதாரங்களின் நீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் அப்பகுதியில் வயிற்றுப்போக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு இதனைக் கட்டுப்படுத்தி முறையான பாதுகாப்பான முறைமையின் ஊடாக நீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நாளை விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

டோலுவ ஸ்ரீ பிம்பராம விகாரையில் நடைபெறவுள்ள இந்த விசேட கூட்டம் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மற்றும் பிரதேச செயலாளர் யமுனா தயாரத்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

டோலுவ குருகெலே பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனும் “ecolai பாக்டீரியா” கலந்த நீரை அருந்தி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலுவ பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 15,000 குடும்பங்கள் இந்த நீரை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இப்பகுதிக்கு நீர் வழங்குவதில் நீர் வழங்கல் சபையினால் 25 நீர் ஆதாரங்களையும், உபாத்திய பிரதேச சபையினால் 05 நீர் ஆதாரங்களையும் பயன்படுத்தி நீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நீர் ஆதாரங்களை பரிசோதிக்கும் போது, ​​தொலுவ பிரதேசத்தின் பல்லேடல்தொட்ட, வாரியகல, புபுரஸ்ஸ, லகும்தெனிய, காக்கஓயா ஆகிய பிரதேசங்களில் ஈ.கோலி பக்டீரியா அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தடையின்றி நீர் ஆதாரங்களைச் சுற்றி மனித வாழ்விடங்களைக் கட்ட அனுமதிப்பது, கழிப்பறைகளை கால்வாய்களுக்குத் திருப்புவது, காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவை இந்த நீர் மாசுபாட்டிற்கான முதன்மைக் காரணங்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad