தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி பட்டறை.....! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 May 2023

தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி பட்டறை.....!

தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான ஒருநாள் தலைமைத்துவ  பயிற்சி பட்டறை.....!


செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

தன் நம்பிக்கையுள்ள இளைஞர் , யுவதிகளினை உருவாக்கல் எனும்  தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு  நேற்றைய தினம் (14.05.2023- ஞாயிற்றுகிழமை) வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் H&D தாதியர் பாடசாலையின்  ஏறாவூர் கிளையினுடைய தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான தன்னம்பிக்கை வழுவூட்டும் பயிற்சியானது வழங்கப்பட்டது.


மனித மேம்பாட்டு அமைப்பின் ஸ்தாபக தலைவர், எஸ். ஏ. முகம்மட் அஸ்லம் அவர்களின் வழிகாட்டலிலும் , அமைப்பின் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிராந்தியத்தினுடைய அமைப்பாளரான ZF.ZIHANY,  அவர்களின் ஏற்பாட்டிலும், H&D தாதியர் பாடசாலையின்  

ஏறாவூர்கி ளையினுடைய முகாமையாளர் எம். யு. எப். றுஸ்னா அவர்களின் ஒருங்கிணைப்பிலும், தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின்   பொறுப்பதிகாரியான, Lt Col. எம். எச். எம்.ரவூப் அவர்களின் 

தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் , பயிற்றுவிப்பளர் Major கே. எம். தமீம் அவர்களினால் ,  தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கு வழங்கப்பட்ட விரிவுரைகளும் பயிற்சிகளும், பல களச் செயற்பாடுகளும் நிகழ்வினை வழுவூட்ட செய்திருந்தன.


அன்று மாலை இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி  Lt Col. எம். எச். எம்.ரவூப் அவர்களின் கரங்களினால்  சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டன. 


No comments:

Post a Comment

Post Top Ad