அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை − 2023 !
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை (2023.05.15) ஆம் திகதி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமது ஷாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நடமாடும் சேவையில் பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அரச நிருவனங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தமது துறைசார்ந்த சேவைகளை பொதுமக்களுக்கு மிக சிறப்பான முறையில் முன்னெடுத்தார்கள்.
குறிப்பாக, அங்கு வழங்கப்பட்ட சேவைகள்,
- தேசிய அடையாள அட்டை பெறல், திருத்தம் மற்றும் தொலைந்த அடையாள அட்டை பிரதியை பெறல்.
- அரச மற்றும் தனியார் காணி பிணக்குகளுக்கான தீர்வுகள்.
- பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு தொடர்பான சேவைகள்.
- முதியோர் அடையாள அட்டை வழங்கல்.
- பாடசாலை இடைவிலகல் தொடர்பான தீர்வுகள்.
- சமுர்த்தி முதலான சமூக நலன்புரி உதவித்தொகை தொடர்பான சேவை.
- நீரிணைப்பு, மின்னிணைப்பு தொடர்பான சேவை.
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உறுதிச்சீட்டுக்கள் வழங்குதல் தொடர்பான நடவடிக்கைகள்.
- ஆயுர்வேத வைத்திய சேவை.
- கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சேவை.
- கமநல சேவைகள், விவசாய திணைக்கள சேவைகள்.
- வன பரிபாலன மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள சேவைகள்.
- பொலிஸ் திணைக்கள சேவைகள் போன்ற பல்துறைசார்ந்த சேவைகளும், தீர்வுகளும் வழங்கப்பட்டன.
இந்நடமாடும் சேவையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மற்றும் தீகவாபி கிராமங்களை சேர்ந்த மூவின மக்களும் கலந்துகொண்டனர்.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment