முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவில் திட்டமிடப்பட்ட தமிழ் பிரதேச செயலாளர்களின் வருகை மேலும் எமது சமூகத்தின் இருப்பிற்கு ஆபத்தை உண்டாக்கும் -ஜனநாயக ஐக்கிய முன்னணி தெரிவிப்பு !
செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கல்குடா தொகுதியின் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையிலான சந்திப்பு கடந்த 05.05.2023 இடம்பெற்றது இதன் போது கருத்து தெரிவித்த இக்கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் M.ஜவாத் அவர்கள் அண்மையில் பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பான விபரங்களில் கல்குடா தொகுதி உள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிதாக வெளியிடப்பட்ட இடமாற்ற விபரத்தில் தமிழ் பிரதேச செயலாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது இங்கு வாழும் மக்களின் இருப்பிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.
தகுதிவாய்ந்த எத்தனையோ முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் இருந்த போதிலும் திட்டமிடப்பட்டு தமிழ் பிரதேச செயலாளர் இப்பகுதிகளில் காலா காலம் நியமிக்கப்பட்டு வருகின்றதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
இது போன்று தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? அதனை அம்மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்னொரன்ன விடயங்களை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த காலங்களில் முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமை புரிந்த தமிழ் பிரதேச செயலாளர் எமது காணிகளை தாரை வார்க்கும் செயற்பாடுகளிலும் நிர்வாக அடக்குமுறைகளிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிகின்றது. இதற்கான விசேட வேலை திட்டம் ஒன்றை ஜனநாயக ஐக்கிய முன்னணி எமது பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள்,பள்ளிவாயல்கள், புத்திஜீவிகளை இணைத்து முன்னெடுத்துச் செல்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் இவ் இடமாற்றத்திற்கு எதிராக எமது பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான நஸீர் அஹமட் அவர்களின் ஊடாக எமக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் அநீதிகளுக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளோம். மேலும் தற்போது நாட்டின் அபிவிருத்தியிலும் இன ஐக்கியத்திற்காகவும் செயற்பட்டு வரும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்று நம்புகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment