கிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனநாயக ஐக்கிய முன்னணி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 17 May 2023

கிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனநாயக ஐக்கிய முன்னணி !

கிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு ஜனநாயக ஐக்கிய முன்னணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.



அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இன்று (17) கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஜனநாயக ஐக்கிய முன்னணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றது.


தமிழ் பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.


குறிப்பாக இந்த விடயத்தில் கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் கௌரவ சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு  விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே தமிழ் பேசும் ஒருவர் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கமுடிக்கின்றது.


தற்போது எமது நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயற்பாடு நாட்டில் வாழும் ஒவ்வொரு இன,மத மக்களின் அபிலாசைகளை மேலோங்கச் செயற்படும் செயற்பாடாக வழிவகுக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். 


அந்த வகையில் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஜனநாயக ஐக்கிய முன்னணி உங்கள் சேவைகள் கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக இடம் பெற ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றது.


                                     ( எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் )

No comments:

Post a Comment

Post Top Ad