தங்க முருகன் சிலையுடன் மன்னாரில் மூவர் கைது !
தங்க முருகன் சிலையை வைத்திருந்த மூவர் மன்னாரில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் தங்கச் சிலையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் பேருந்தில் தங்கச் சிலை கொண்டுச் செல்லப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தங்கச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலை பயணிகள் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிலையை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சிலையை விற்பனைக்காக எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் எருக்கலம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment