விமான நிலையத்தில் 7 கிலோ தங்கத்துடன் கைதான இலங்கை பிரஜை! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 May 2023

விமான நிலையத்தில் 7 கிலோ தங்கத்துடன் கைதான இலங்கை பிரஜை!

விமான நிலையத்தில் 7 கிலோ தங்கத்துடன் கைதான இலங்கை பிரஜை!


செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

சட்டவிரோதமான முறையில் 06.996 கிலோ தங்கத்தை நாட்டுக்குள் கடத்தி வந்த 43 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (07) காலை விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட தங்கத்தை சந்தேகநபர் தனது உடலில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 04.942 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளும் 02.54 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் கொழும்பு 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad