2024 முதல் க.பொ.த சாதாரண தர மற்றும்உ யர்தர பரீட்சைகள் ஒரே வருடத்தில்ந டத்தப்படும் : கல்வி அமைச்சு !
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வந்து பரீட்சை அட்டவணையை புதுப்பித்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.
7,800 கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு புதிய நியமனங்களை வழங்கும் அதேவேளை தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரண்டு பரீட்சைகளையும் அடுத்த வருடத்திற்குள் நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
விஞ்ஞானம், தொழிநுட்பம் போன்ற பாடங்களுக்காக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கோவிட் தொற்று காரணமாக நாட்டின் கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment