தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு தாய்ப்பால் ஊட்டும் போது தாய்ப்பால் புரையேறி சிசு உயிரழப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 March 2023

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு தாய்ப்பால் ஊட்டும் போது தாய்ப்பால் புரையேறி சிசு உயிரழப்பு !

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு  தாய்ப்பால் ஊட்டும் போது தாய்ப்பால் புரையேறி சிசு உயிரழப்பு ! 


திருகோணமலை மொரவேவ பிரதேசத்திலுள்ள கிராமத்தில் குறித்த சிசுவின் தாய் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு தன் குழந்தைக்கு தாய்பால் ஊட்டியுள்ளார். தன் கவனம் முழுவதும் தொலைக்காட்சியில் இருந்தாத்தால்,  குழந்தை பாலை ஒழுங்காக உறிஞ்சுகின்றதா , விழுங்கின்றதா என்பதை கூட கவனிக்காமல் இருந்துள்ளார். 


குழந்தைக்கு தாய்ப்பால்  சரியான முறையில்  வழங்கப்படாத்தால், தாய்ப்பால் புரையேறி  குழந்தை உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு சிசுக்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு ; தொலைக்காட்சியை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். உங்கள் குழந்தை மீது கவனமாக இருங்கள், உங்கள் கவனம் சிதறினால் போவது பொருள் அல்ல உயிர்…….

No comments:

Post a Comment

Post Top Ad