பசறையில் லொறியும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்து ; 19 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு!
பசறை பகுதியில் உந்துருளியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 19 வயதுடைய கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் பசறையில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், மொனராகலையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டுயிருந்ந உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளி செலுத்தி சென்ற 19 வயதுடைய மீதும் பிடி கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்த குறித்த இளைஞரின் தந்தை (வயது 50) பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மரணித்த 19 வயதுடைய இளைஞரின் சடலம் பசறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு லொறிகளின் சாரதிகள் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment