கினிகத்தேனையில் 3 பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து !
3 பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ள சம்பவமொன்று கினிகத்தேனை பகுதியில் பதிவாகியுள்ளது.
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் ஹட்டன் நகரில் இருந்து கண்டி நோக்கி சென்ற அரச பஸ் உட்பட இரு அரச பஸ்களும், தியகல கினிகத்தேன பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில், கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment