மன்னிப்பு கோரிய மைத்திரி தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குத்தாகவும் தெரிவித்தார் !
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் துயரச் சம்பவம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment