​நியூசிலாந்து டெஸ்டுக்கு இலங்கை வீரர்கள் மனைவிகளை அழைத்துச் செல்ல அனுமதி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 31 January 2023

​நியூசிலாந்து டெஸ்டுக்கு இலங்கை வீரர்கள் மனைவிகளை அழைத்துச் செல்ல அனுமதி !

நியூசிலாந்து டெஸ்டுக்கு இலங்கை வீரர்கள் மனைவிகளை அழைத்துச் செல்ல அனுமதி ! 


இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவிகளை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு டெஸ்ட் போட்டிக்காக மட்டும் அழைத்து செல்ல இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது.


நியூசிலாந்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் போது, வீரர்கள் தங்கள் துணையுடன் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரின் போது மனைவிகள் குழந்தைகளுடன் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழு, குடும்ப உறுப்பினர்களை அவர்களது சொந்த செலவில் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என கூறியது, வீரர்கள் குடும்பத்தினருடன் இருந்தால் ஓய்வு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம் என்று தெரிவித்திருந்தது.


No comments:

Post a Comment

Post Top Ad