அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் 30 வருட சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கல்விசாரா உத்தியோகத்தர் ஜனாப்.யூ.எல்.எம். ஹூசையின் அவர்களின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு !
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் 30 வருட சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கல்விசாரா உத்தியோகத்தர் ஜனாப்.யூ.எல்.எம். ஹூசையின் அவர்களின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு கல்விசாரா நலன்புரி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் பதிவாளர் திரு. ஏ.புஷ்பராஜ் தலைமையில் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (20) சிறப்பாக இடம்பெற்றது.
பதிவாளர் திரு ஏ.புஷ்பராஜ் அவர்களினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி அவர்களினால் 30 வருட சேவையினை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இதன் போது நிதி மற்றும் நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.சீ.ஜூனையிட் அவர்களினால் நலன்புரிச் சங்கத்தின் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உட்பட அனைத்து கல்வி சாரா உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment